ஈரோடு இடைத்தேர்தல் - நாதக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு.!
casefile against erode ntk candidate
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் பதிவு செய்யப்படும் வாக்கு எண்ணிக்கை 8-ந்தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 46 பேர் போட்டியிடும் இந்தத் தேர்தர்லில் திமுகவுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வேட்பாளர் சீதாலட்சுமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மரப்பாலம் முனிசிபல் சத்திரம் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்காததை கண்டித்து சாலை மறியிலில் ஈடுபட்ட சீதாலட்சுமி உள்பட ஒன்பது பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
English Summary
casefile against erode ntk candidate