கோளாறு சீரானது..ஆன்லைன் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்..மெட்ரோ அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


தொழில்நுட்பக் கோளாறு சீர் செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் இப்போது சென்னை மெட்ரோ ரெயில் டிக்கெட்டுகளை வாட்ஸ்அப் மூலம் வாட்ஸ்அப் சாட்பாட் - 8300086000 ஐப் பயன்படுத்தி வாங்கிக்கொள்ளலாம் என்றும் சி.எம்.ஆர்.எல் ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு என நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து சேவையில் முக்கிய பங்கு வகிக்கிறது  மெட்ரோ ரெயில் சேவை.நெரிசலில் சிக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு இடத்திற்கு செல்வதற்கு மெட்ரோ ரெயில் சேவை மிகவும் பொது மக்களுக்கு கை கொடுத்து வருகிறது.

சென்னையை பொறுத்தவரை மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து விமான நிலையம், புறநகர் ரெயில் நிலையம், பஸ் நிலையம் போன்றவற்றை இணைக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. 2 வழித்தடங்கள் மூலம் மெட்ரோ ரெயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.

 மெட்ரோ ரெயில் சேவையினால் தினமும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகிறார்கள். மேலும் மெட்ரோ ரெயிலில் பயணிகள் எளிதாக செல்ல பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுவருவதால் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், இன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக Whatsapp Chatbot மூலம் ஆன்லைன் டிக்கெட்டுகள் பெறுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தொழில்நுட்பக் கோளாறு சீர் செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் இப்போது சென்னை மெட்ரோ ரெயில் டிக்கெட்டுகளை வாட்ஸ்அப் மூலம் வாட்ஸ்அப் சாட்பாட் - 8300086000 ஐப் பயன்படுத்தி வாங்கிக்கொள்ளலாம் என்றும் சி.எம்.ஆர்.எல் ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு என மெட்ரோ ரெயில்  நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் முன்னதாக, தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயணிகள் அனைவரும் CMRL மொலைப் ஆப், Paytm, Phonepe, சிங்கார சென்னை கார்டு, CMRL டிராவல் கார்டுகள், பயணச்சீட்டு வழங்குமிடம் ஆகிய மற்ற வழிகள் மூலம் டிக்கெட்டுகளை பெறுமாறு மெட்ரோ ரெயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The disorder is stable Tickets can be purchased online Metro Announcement


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->