ஐந்து மொழிகளில் நன்றி தெரிவித்த விக்ரம்..! - Seithipunal
Seithipunal


கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை பல ஆண்டுகால முயற்சிக்கு பிறகு படமாக எடுத்துள்ளார் இயக்குநர் மணிரத்னம். இந்த படத்தில் நடிகர் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். 

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் நேற்று உலகம் முழுவதும் திரையில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் வரும் விக்ரம், தனது திறமையான நடிப்பின் மூலம் அந்த கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார். 

இந்த படம் குறித்து நடிகர் விக்ரம் தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ''நன்றி..தேங்க்ஸ்..சுக்ரியா..நன்னி..தன்யவாத்.. இப்படி எந்த மொழியில் சொன்னாலும், கேட்பதற்கும் உணர்வதற்கும் மிகவும் நன்றாக உள்ளது. பொன்னியின் செல்வன் படத்திற்கு கிடைத்த வரவேற்பிற்கும், ஆதித்த கரிகலானுக்கு கிடைத்த அந்த ஆக்ரோஷமான பின்னூட்டத்திற்கும் ரொம்ப நன்றி. 

நான் நிறைய படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். எப்போதும் எல்லா படங்களையும், என் படம், என்னுடைய கதாபாத்திரம் என்று  பெருமைப்படுவேன். எல்லோரும் இது எங்களுடைய படம் என்று கொண்டாடுவது எனக்கு பெரிய மகிழ்ச்சி. படக்குழுவினருக்கும், இயக்குநர் மணிரத்னத்திற்கும் நன்றி'' என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vikram thanks to directers and co actors


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->