"காமெடியா இருக்கு" சூப்பர் ஸ்டாரின் ஹைதராபாத் குறித்த பேச்சு... நடிகை ரோஜா பதிலடி.!
Actress and minister Roja reacts to Superstar comment on Hyderabad
முன்னாள் தென்னிந்திய நடிகையும் தற்போதைய தெலுங்கானாவின் அமைச்சருமான ரோஜா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேட்டி கொடுத்திருப்பது பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
ஹைதராபாத் சென்றுள்ள ரஜினி கடந்த 20 ஆண்டுகளில் அந்த நகரம் மிகப்பெரிய வளர்ச்சியடைந்துள்ளது எனவும் அதற்கு சந்திரபாபு நாயுடு ஆட்சி தான் காரணம் எனவும் பேசியிருக்கிறார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள ரோஜா தெலுங்கானாவில் 2003 உடன் சந்திரபாபுவின் ஆட்சி முடிந்து விட்டது. அதன் பிறகு அவர்கள் எப்படி ஹைதராபாத்தில் வளர்ச்சிக்கு காரணமாக இருக்க முடியும் எனக் கேட்டுள்ளார்.
என்டி ராமராவின் ஆசி என்றுமே சந்திரபாபு நாயுடுக்கு உண்டு எனவும் ரஜினி தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்திருக்கும் ரோஜா என்டிஆரின் இறப்பிற்கு காரணமே சந்திரபாபு நாயுடு தான். பின்னர் அவருக்கு எப்படி என்டி ராமராவின் ஆசி கிடைக்கும் எனவும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய அவர் ரஜினிகாந்தின் பேச்சு நகைச்சுவையை வர வைக்கும் வகையில் காமெடியாக இருப்பதாக தெரிவித்தார். ஒரு காலத்தில் ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கியிருந்த நடிகை சூப்பர் ஸ்டாரையே இவ்வளவு நக்கலாக பேசியிருப்பது தமிழ் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
English Summary
Actress and minister Roja reacts to Superstar comment on Hyderabad