நடிகை அஞ்சலியின் 50 வது திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட்.!
actress Anjali movie release update
கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான 'போட்டோ' என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.
அதன் பிறகு இவர் தமிழ் திரைப்படங்களிலும் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டுள்ளார். மேலும் இவர் தமிழ், தெலுகு, மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
ஷிவா துர்லாபடி இயக்கத்தில் அஞ்சலி தற்போது 50ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஹாரர் மற்றும் காமெடி திரைப்படமாக உருவாகும் இந்த திரைப்படம் தெலுங்கில் உருவாகி உள்ளது.
இந்த திரைப்படத்தில் சத்தியம் ராஜேஷ், சீனிவாச ரெட்டி, சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படம் வருகின்ற ஏப்ரல் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
English Summary
actress Anjali movie release update