அதிமுக, எடப்பாடி தலையில் இடியை இறக்கிய உயர்நீதிமன்றம்! தேர்தல் ஆணையம் கையில் சின்னம்!
ADMK EPS Case EC Chennai HC
அ.தி.மு.க. உள்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த தடை விதித்திருந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்ட உள்கட்சி மாற்றங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கக் கூடாது எனக் கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதன் மூலம், தேர்தல் ஆணையம் அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரங்களை ஆய்வு செய்ய முழு அதிகாரம் பெற்றுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பின்படி, தேர்தல் ஆணையம் அ.தி.மு.க.வில் நிலவும் உள்கட்சி மாற்றங்களை, குறிப்பாக இரட்டை இலையச்சின்னம் ஒதுக்கீடு விதிகள் உள்ளிட்ட விவகாரங்களை சட்டப்படி ஆய்வு செய்யலாம். மேலும், அதற்கான அதிகாரம் உள்ளதா இல்லையா என்பதையும் தானே தீர்மானிக்கலாம் என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த தீர்ப்பு, அ.தி.மு.க.வின் உள்கட்சி நிலைமைக்கு முக்கியமான திருப்பமாகக் கருதப்படுகிறது. இதனை தொடர்ந்து, தேர்தல் ஆணையம் விரைவில் அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரத்தில் அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
ADMK EPS Case EC Chennai HC