'சில்லுனு ஒரு காதல்' பட பூமிகாவுக்கு இவ்வளவு பெரிய மகனா? வைரலாகும் புகைப்படங்கள்.!
actress bhumika chawla son photo viral
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிக முன்னணி நடிகராக இருந்தவர் தான் பூமிகா. இவர் நடிகர் சூர்யாவுடன் சேர்ந்து நடித்த சில்லுனு ஒரு காதல் திரைப்படம் மிகவும் பிரபலமானது. அதே வகையில் விஜயுடன் ரோஜா கூட்டம், பத்ரி உள்ளிட்ட திரைப்படங்களில் பூமிகா நடித்திருக்கிறார்.

பூமிகாவின் முன்பே வா பாடல் இப்போதும் கூட ரசிகர்களின் மிக ரசனைக்குரிய பாடலாக கருதப்படுகிறது. சமீப காலமாக தமிழ் திரைப்படங்களை விட்டு விலகி தெலுங்கு மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் பூமிகா நடித்து வருகிறார்.
கடைசியாக பூமிகா நடிப்பில் சீதாராமன் திரைப்படம் வெளியாகியது. இதில் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். கடந்த 2007 இல் யோகா பயிற்சியாளர் ஒருவரை பூமிக்கு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2014இல் யாஷ் என்ற மகன் பிறந்தார்.

இந்த நிலையில் தீபாவளி தினத்தை முன்னிட்டு பூமிகா தனது கணவர் மற்றும் மகனுடன் கொண்டாடிய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
English Summary
actress bhumika chawla son photo viral