பண்ணையார்களை அரசியலை விட்டு அகற்றுவதே முதல் வேலை..விஜய் ஆவேசம்!
The first task is to remove the feudal lords from politics. Vijays outrage!
பண்ணையார்களை அரசியலை விட்டு அகற்றிவிட்டு, 2026-ல் த.வெ.க. வரலாறு படைக்கும் என விஜய் பேசினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய அதன் தலைவர் விஜய் My Friend, My Brother என பேசத் தொடங்கிய விஜய் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பிரசாந்த் கிஷோருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். இதனை தொடர்ந்து என் நெஞ்சில் குடியிருக்கும் என்று கூறி உரையை தொடங்கிய விஜய்,தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. வரலாறு படைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் அரசியல் என்றால் வேற வெலல் தான் என்றும் அரசியலில் மட்டும் தான் வித்தியாசமான ஒன்றாக நாம் பார்க்கலாம் என்றும் அரசியலில் யார் யாரை எப்போது எதிர்ப்பார்கள் என தெரியாது என்றும் அரசியலில் மட்டும் தான் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய விஜய் மக்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சுப் போன ஒருவன் அரசியலுக்கு வந்தால், ஒரு சிலபேருக்கு மட்டும் எரிச்சல் வரத்தானேசெய்யும்என்றும்இதுவரைநாம்சொன்னபொய்யையெல்லாம் நம்பி மக்கள் ஓட்டுபோட்டனரே, இவனை எப்படி நாம் Close பண்ணலாம் என நினைப்பர் என கூறினார்.
மேலும் குழப்பத்தில் கத்துவதா? கதறுவதா என தெரியாமல் விமர்சனம் செய்கிறார்கள் என்றும் வருகின்ற எதிர்ப்பை எல்லாம் Left Handல் டீல் செய்து த.வெ.க. இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது என்றும் கட்சியைபலப்படுத்தும்பணியைசெய்துவருகிறோம்.வேரையும் விழுதுகளையும் பலப்படுத்தும் வேலையை தான் நாம் செய்து வருகிறோம் என பேசிய விஜய் அண்ணா கட்சி ஆரம்பித்த போது பின்னால் நின்றவர்கள் இளைஞர்கள் என்றும் நமது கட்சி எளிய மக்களுக்கான கட்சி,பண்ணையார்களுக்கான கட்சி அல்ல என்றும் தவெக பண்ணையாளர்களுக்கான கட்சி அல்ல. சாதாரண மக்களுக்கான கட்சி. அதனால் இங்கு சாதாரண மக்கள் இருப்பர் என்றும் பண்ணையார்களை அரசியலை விட்டு அகற்றுவதே முதல் வேலை.இவ்வாறு விஜய் பேசினார்.
English Summary
The first task is to remove the feudal lords from politics. Vijays outrage!