நடிகை ஜனனி ஐயருக்கு நிச்சயதார்த்தம்; மாப்பிள்ளை யார் தெரியுமா..?
Actress Janani Iyer is engaged
'அவன் இவன்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ஜனனி ஐயர். அடுத்து, அசோக் செல்வனுடன் 'தெகிடி' படத்தில் நடித்தார். இப்படம் மக்களிடம் பெரிதளவில் வரவேற்பை பெற்றது. விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.
இந்நிலையில், நடிகை ஜனனிக்கும் விமானியான சாய் ரோஷன் ஷ்யாம் என்பவருக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை ஜனனி ஐயர் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், தமிழ் திரையுலகினரும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Actress Janani Iyer is engaged