பாஜாகவில் இணையும் பிரபல தமிழ் நடிகை.. வெளியான தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் 70 களில் தொடக்கத்தில் அறிமுகமான நடிகை ஜெயசுதா. இவர் பல முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்துள்ளார். தமிழில் அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், அபூர்வ ராகங்கள், நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ள ஜெயசுதா பாஜகவில் இணைய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ராஜசேகரரெட்டி இருந்த சமயத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்ட இவர், 2016ல் தெலுங்கு தேச கட்சியில் இணைந்தார். அதன் பிறகு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் இணைந்தார். தற்போது அரசியலில் இருந்து விலகியிருக்கும் இவர், பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress jayasutha join BJP


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->