கவுண்டரில் எடுத்த டிக்கெட்டை ஆன்லைனில் ரத்து செய்யலாம் - அமைச்சர் அஷ்வினி.!
railway department minister announce counter ticket cancelled online
மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது டிக்கெட் கவுன்ட்டரில் காத்திருப்போா் பட்டியல் டிக்கெட்டை வாங்கியவா்கள், இருக்கை உறுதியாகாத நிலையில் ரெயில் புறப்படுவதற்கு முன்பாக டிக்கெட் கவுன்ட்டருக்கு சென்று ரத்து செய்யவேண்டிய நிலை குறித்து பா.ஜ.க. எம்.பி. மேதா விஷ்ரம் குல்கா்னி கேள்வி எழுப்பினார்.

இதற்கு ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துள்ளார். அதாவது, "ரெயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டர்களில் எடுத்த டிக்கெட்டை ஆன்லைன் மூலம் ரத்து செய்யலாம் என்றுத் தெரிவித்தார்.
மேலும், ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் அல்லது 139 எண்ணுக்கு அழைத்து கவுன்ட்டர்களில் எடுத்த டிக்கெட்டுகளை ரத்து செய்யலாம் எனக்கூறிய அஸ்வினி வைஷ்ணவ், ரத்து செய்த அசல் டிக்கெட்டை முன்பதிவு கவுண்ட்டரில் செலுத்தி பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
English Summary
railway department minister announce counter ticket cancelled online