ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒன்றிய அரசை கண்டித்து திமுக போராட்டம் !! - Seithipunal
Seithipunal


100 நாள் வேலை செய்த ஏழை எளிய மக்களின் ரூ. 4034 கோடி ஊதியத்தை வழங்க மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து ஆற்காடு கிழக்கு திமுக ஒன்றிய செயலாளர் எம்.வி. பாண்டுரங்கன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 மத்திய அரசு 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை வழங்காமல் தமிழகத்தை தொடர்ச்சியாக வஞ்சித்துவரும் மத்திய பாஜாக அரசை கண்டித்து திமுக சார்பில்,ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் தலா இரண்டு இடங்கள் என 18 இடங்களில் வரும் 29 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணியளவில் திமுக தலைமை கழகத்தின் அறிவுறுத்தலின் படி மாபொரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்ததாஜ்புரா கூட்ரோட்டில் ஆற்காடு கிழக்கு ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து 100 நாள் வேலை செய்த ஏழை எளிய மக்களின் ரூ. 4034 கோடி ஊதியத்தை வழங்க மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றிய செயலாளர் எம்.வி. பாண்டுரங்கன் தலைமையில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில்  மாவட்ட அவைத் தலைவர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் பண்டேரிநாதன், துணைச் செயலாளர் மணி, செந்தில், அன்பு, கோபி, பிரசன்னா, சரவணன், ராஜா, வெங்கடேசன், சிவகுமார், கஜபதி, சீனிவாசன், ஜெயக்குமார், ஜெயபாரதி, சரண்ராஜ், தணிகேசன், ராஜா, ஷகிலா உள்ளிட்ட சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஒன்றிய அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர் .இதில் மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK protests in Ranipet district against Union government


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->