உங்கள் கடைசி நாள், ஹிஜாப் அணிந்த முதல் நாளாக... ஒரு நடிகையின் அதிரடி மாற்றம்.!
Actress Sana Khan reason for wearing hijab Instagram
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள பிரபல நடிகை சனா கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹிஜாப் அணிவதற்கான காரணம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தெரிவித்துள்ளதாவது, "எனது கடந்த கால வாழ்க்கையில் பெயர், பணம், புகழ் உள்ளிட்ட அனைத்தும் என்னிடம் இருந்தன. ஆனால் என்னிடம் நிம்மதி இல்லை. அப்போது நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன்.
கடந்த 2019-ம் ஆண்டு ரமலான் பண்டிகை நாளன்று எனக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவு எனக்கு மிகவும் பயத்தை ஏற்படுத்தியது. அதில், நான் கல்லறை ஒன்றில் இருந்தேன். அங்கு உங்கள் கடைசி நாள் ஹிஜாப் அணிந்த முதல் நாளாக இருக்க விரும்பவில்லை என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.
அதற்கு மறுநாள் எனக்கு பிறந்த நாள். காலையில் நான் எழுந்தவுடன் ஹிஜாப் அணியத் துவங்கினேன். அப்போது இனி இதை ஒருபோதும் அகற்றமாட்டேன் என முடிவெடுத்தேன். இப்பொழுது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்". என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Actress Sana Khan reason for wearing hijab Instagram