அடடே.! பூவே உனக்காக சங்கீதாவின் கணவர் இந்த இயக்குனர் தானா.?! - Seithipunal
Seithipunal


தளபதி விஜயின் நடிப்பு கேரியரில்  முக்கியமானதாக அமைந்த படம் பூவே உனக்காக. இளைஞர்கள் மத்தியில் மட்டுமே பிரபலமாக இருந்த விஜய்யை குடும்ப ரசிகர்கள் மத்தியிலும் பிரபலப்படுத்தியது இந்த படம் தான் என்றால் மிகையாகாது.

இந்தத் திரைப்படத்தை வெற்றி இயக்குனர் விக்ரமன் இயக்கியிருந்தார். இந்தத் திரைப்படத்தில் விஜய்யுடன் சங்கீதா, சார்லி, மலேசியா வாசுதேவன், நம்பியார், நாகேஷ் என ஒரு பெரிய திரை பட்டாளமே நடித்திருந்தது. 1996 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம்  200 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

இந்தத் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்  சரவணன். இவர் தளபதி விஜயின் செல்வா, ஷாஜகான், திருப்பாச்சி, மதுர உள்ளிட்ட திரைப்படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார். மேலும் இவர் இயக்குனராக சிம்பு நடிப்பில் வெளியான சிலம்பாட்டம் என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.

பூவே உனக்காக திரைப்படத்தின் கதாநாயகியான சங்கீதாவை காதலித்து  2000 ஆண்டில் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரது இயக்கத்தில் கௌதம் கார்த்திக், லட்சுமிமேனன் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும்  'சிப்பாய்' என்ற திரைப்படம் வெளியாக தயாராக இருக்கிறது  என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress sangeetha husband directorial debut was with simbu


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->