எவர்கிரீன் அழகி சிம்ரனுக்கு இவ்ளோ பெரிய மகனா.?! வைரல் புகைப்படம்.!  - Seithipunal
Seithipunal


1998 ஆம் ஆண்டு வெளியான நேருக்கு நேர் என்ற திரைப்படத்தில்  கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சிம்ரன். அதனைத் தொடர்ந்து  தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும்  நடித்து 90களின் இறுதியிலும் 2000 களின் துவக்கத்திலும் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயினாக வலம் வந்தவர் சிம்ரன்.

சில காலம் நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த சிம்ரன் தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கியிருக்கிறார். இவர் சூப்பர் ஸ்டாரின் நடிப்பில் உருவான  பேட்ட  திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பிரசாந்தின்அந்தகன் திரைப்படத்திலும்  முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார்.

 2003 ஆம் ஆண்டு தீபக் பாகா என்ற தனது குழந்தை பருவ நண்பரை  திருமணம் செய்து கொண்டார் சிம்ரன். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவ்வப்போது சமூக வலைதளங்களில் இவர்களின்  படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வருவார்.

தற்போது இவரது மகன் ஆதித்தின்  பிறந்த நாளை முன்னிட்டு  அவருடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்து இருக்கிறார் சிம்ரன். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அடடா நம் சிம்ரனின் மகனா இது! பக்கா மாஸா இருக்கிறாரே! என  இணையதள வாசிகள் கமெண்ட் செய்து வைரலாக்கி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress simran son video went viral on social media


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->