முத்தத்தால் வந்த வினை.. ஆதிபுருஷ் இயக்குனருக்கு பாஜக கண்டனம்.! - Seithipunal
Seithipunal


ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஆதிபுருஷ்’. இந்த படம் ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிகர் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும், கீர்த்தி சனோன் சீதையாகவும், சையிப் அலிகான் ராவணனாகவும் நடிக்கின்றனர்.

3டியில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில், வரும் ஜூன் 16ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனையடுத்து ஆதிபுருஷ் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் திரையரங்கின் ஒரு இருக்கையை ஆஞ்சநேயருக்காக விடப்போவதாகவும் அந்த டிக்கெட் விற்கப்படாது எனவும் படக்குழு நூதன அறிவிப்பை வெளியிட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ஓம் ராவத், நடிகை கீர்த்தி சனோன் திருப்பதி கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது தரிசனத்தை முடித்துவிட்டு காரில் கிளம்ப சென்ற நடிகை கீர்த்தி சனோன், இயக்குனர் ஓம் ராவத் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டு தனது அன்பை பரிமாறிக் கொண்டார். 

தற்போது இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பாகிய நிலையில் திருப்பதி கோவிலில் வைத்து நடிகை கீர்த்தி சனோன் முத்தமிட்டதிற்கு ஆந்திர மாநில பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் கோவிலுக்கு வந்தவர்கள் அதன் புனிதத்தை காக்க வேண்டும் எனவும் உடனடியாக இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Adiprush director kissed actress Keerthi Sanon in thirupati


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->