தந்தை இறந்த நிலையில், நடிகர் அஜித்குமார் குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கை! - Seithipunal
Seithipunal


எங்கள் தந்தை பி.எஸ். மணி நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை தூக்கத்திலேயே காலமானார். அவருக்கு வயது 85.

அவருக்கும் எங்கள் குடும்பத்துக்கும் பலராலும் வழங்கப்பட்ட அன்புக்கும் மற்றும் ஆதரவுக்கும், குறிப்பாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பக்கவாதத்தைத் தொடர்ந்து கவனித்துக் கொண்ட மருத்துவ வல்லுநர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். 

துக்கத்தின் இந்த நேரத்தில், அவர் ஒரு நல்ல வாழ்க்கை வாழ்ந்தார் என்று நாங்கள் ஆறுதல் அடைகிறோம். எங்கள் அம்மா, கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக அவருடன் வாழ்ந்து இருக்கிறார்.

எங்களுக்கு வரும் அன்பான, ஆறுதலான செய்திகள் மற்றும் இரங்கல்களை நாங்கள் மதிக்கிறோம், எங்களால் அழைப்புகளை எடுக்கவோ அல்லது செய்திகளுக்கு தகுந்த நேரத்தில் பதிலளிக்கவோ இயலவில்லை என்றால் எங்கள் சூழலை உணர்ந்து கொள்ளவும். 

அவரது இறுதி சடங்குகள் குடும்ப விஷயமாக இருக்க வேண்டும். இழப்பை அறிந்த அனைவரும் தனிப்பட்ட முறையில் துக்கப்பட வேண்டும் என்ற எங்கள் விருப்பத்திற்கு மதிப்பளித்து, முடிந்தவரை சமத்துவத்துடனும் கண்ணியத்துடனும் அவரது மறைவைச் சமாளிப்போம் என்று நாங்கள் நம்புகிறோம்.

அனுப்குமார், அஜித்குமார், அனில் குமார்

இரங்கல் செய்திக்கு, psmanifamily@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ajith kumar family given statement about his father funeral


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->