இது என்னடா அஜித்துக்கு வந்த சோதனை.? சென்சார் போர்டியில் இருந்து லீக்கான அதிர்ச்சி தகவல்.!
Ajith Movie thunivu may Bad
நடிகர் அஜித்தின் துணிவு படமும், விஜயின் வாரிசு திரைப்படமும் ஒரே நாளில் வெளியாக இருக்கின்றது. இதில் முன்பதிவு செய்யும் முயற்சியில் ரசிகர்கள் தீவிரமாக களமிறங்கி இருக்கின்றனர்.
இந்த படங்களின் ட்ரெய்லர்கள் சமீபத்தில் வெளியாகியது. வாரிசு படம் குடும்ப கதையை அடிப்படையாகக் கொண்டது என்பதை அந்த ட்ரைலர் காட்டியது. அதுபோல அஜித்தின் திரைப்படம் மிகவும் மாஸாக இருப்பது போல காட்டப்பட்டு இருந்தது.
அஜித் கூறும் வசனங்கள் முதல் கொண்டு காட்சிகள் அனைத்துமே வெறித்தனமாக இருந்தது. மேலும், துணிவு படத்தில் அதிகப்படியான பீப் சவுண்ட் காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை கொடுத்துள்ளது.
வாரிசு படத்திற்கு யு சான்றிதழ் மட்டும்தான் கொடுக்கப்பட்டுள்ளது. துணிவு படத்தில் அதிகப்படியான ஆக்ஷன் காட்சிகள் இருப்பதால், வன்முறையை காரணம் காட்டி ஓரிரு நாடுகளில் படம் ஒளிபரப்பாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய நிலையில், இப்படத்தை பார்த்த சென்சார் போர்டு நிறுவனம் சார்பில், அஜித்தின் துணிவு படத்தில் பெரிய அளவில் கதை இல்லை எனவும், வெறும் ஆக்ஷன் காட்சிகள் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. வாரிசு பட ட்ரெய்லர் சற்று மொக்கையாக இருந்தாலும் படம் நன்றாக இருப்பதாக படத்தை பார்த்த சென்சார் போர்டில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
English Summary
Ajith Movie thunivu may Bad