பத்மபூஷண் விருது: ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடிக்கு நடிகர் அஜித் நன்றி!  - Seithipunal
Seithipunal


இந்திய ஜனாதிபதியிடம் இருந்து மதிப்புமிக்க பத்ம விருது பெறுவதில் ஆழ்ந்த பணிவும், கவுரவமும் அடைகிறேன் என்றும் இந்த மதிப்புமிகு கவுரவத்திற்காக நான், இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு என்னுடைய மனப்பூர்வ நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என நடிகர் அஜித்குமார் கூறியுள்ளார்.

நாட்டின் குடிமக்களுக்கான உயரிய விருதுகளாக உள்ள பத்ம விருதுகள் பற்றிய அறிவிப்பு நேற்று வெளியானது. இதில், நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டது. இந்த பத்மபூஷண் விருது அறிவிப்புக்கு ஜனாதிபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு தன்னுடைய மனப்பூர்வ நன்றியை நடிகர் அஜித் தெரிவித்து கொண்டார்.

இதுபற்றி அவர் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், இந்திய ஜனாதிபதியிடம் இருந்து மதிப்புமிக்க பத்ம விருது பெறுவதில் ஆழ்ந்த பணிவும், கவுரவமும் அடைகிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த மதிப்புமிகு கவுரவத்திற்காக நான், இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு என்னுடைய மனப்பூர்வ நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டுள்ள  நடிகர் அஜித் இந்த அங்கீகாரம் தனிப்பட்ட நபருக்கு கிடைத்த பாராட்டு என்றில்லாமல், கூட்டு முயற்சி மற்றும் பலருடைய ஆதரவு ஆகியவற்றிற்கான நற்சான்று என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் இதேபோன்று திரை துறையினர் மற்றும் விளையாட்டு துறையை சேர்ந்தவர்கள்  ஆதரவளித்த அனைவருக்கும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் தன்னுடைய நன்றியை அவர் தெரிவித்து கொண்ட நடிகர் அஜித் . இறுதியாக ரசிகர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கும், அவர்களுடைய அன்பு மற்றும் ஆதரவுக்காக தன்னுடைய நன்றியை  தெரிவித்து கொண்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ajith thanks President Murmu, PM Modi for Padma Bhushan 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->