2028 ஆம் ஆண்டில் 03-வது பொருளாதார நாடாக இந்தியா மாறும்; பன்னாட்டு நிதிச்சேவை நிறுவனம் கணிப்பு..!
India will become the 03rd largest economy in 2028
எதிர்வரும் 2028-ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார மதிப்பு 5.7 டிரில்லியன் டாலராக உயரும என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகின் 03-வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா மாறும் என முன்னணி நிதிச் சேவை நிறுவனம் மோர்கன் ஸ்டான்லி கணித்துள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட பன்னாட்டு நிதிச்சேவை நிறுவனம் தான் மோர்கன் ஸ்டான்லி நிறுவனம். இந்த நிறுவனம் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த 2023-இல் 3.5 டிரில்லியன் டாலர்கள் பொருளாதார மதிப்புடன் இந்தியா 05-வது இடத்திற்கு முன்னேறியது. வரும் 2026-இல் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு 4.7 டிரில்லியன் டாலர்களாக உயரும். அமெரிக்கா, சீனா, ஜெர்மனிக்கு அடுத்து 04-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்று குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் 2028-ஆம் ஆண்டிற்குள் இந்தியா ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி, 5.7 டிரில்லியன் டாலர்கள் மதிப்புடன் 03-வது இடத்திற்கு முன்னேறும். அதாவது, கடந்த 1990-ஆம் ஆண்டில் உலகின் 12-வது பெரிய பொருளாதார நாடாக இருந்த இந்தியா, 2000-ஆம் ஆண்டில் 13-வது இடத்துக்கு பின்தங்கியது. பின்னர் 2020-இல் 09-வது இடத்துக்கும், 2023-இல் 05-வது இடத்துக்கும் முன்னேறியுள்ளது.

அதாவது, உலகின் மொத்த உற்பத்தியில் (ஜிடிபி) இந்தியாவின் பங்கு 3.5 சதவீதத்தில் இருந்து 4.5 சதவீதமாக அதிகரிக்க கூடும்.அத்துடன், வலுவான மக்கள்தொகை வளர்ச்சி, துல்லியமான ஜனநாயகம் மற்றும் பெரும் பொருளாதார ஸ்திரத்தன்மையால் வரும் ஆண்டுகளில் உலகளாவிய உற்பத்தியில் இந்தியாவின் பங்கு உயரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், உலக அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலையிலும், 2025-ஆம் ஆண்டில் இந்திய பங்குகள் விலைகள் அதிகரிக்கும் என்றும் அஞ்சாத அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
India will become the 03rd largest economy in 2028