விஜய் கட்சியின் முதல் பொதுக்குழு! மின்னஞ்சல் மூலம் அழைப்புக் கடிதம்!
TVK Pothukuzhu date announce
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் நடைப்பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் விடுத்துள்ள அறிவிப்பில், "தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழு கூட்டமானது மார்ச் மாதம் 28ஆம் தேதி (28.03.2025) வெள்ளிக்கிழமை அன்று காலை 09.00 மணிக்கு, சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில், கழக விதிகளின்படி, கழகத் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுக்குழுவில் கலந்துகொள்வதற்கான அழைப்புக் கடிதம் மின்னஞ்சல், வாட்ஸ் ஆப் மற்றும் தபால் வாயிலாக அனுப்பப்பட்டிருக்கிறது.
பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்புக் கடிதம் மற்றும் தலைமைக் கழகத்தின் அடையாள அட்டை ஆகியவற்றுடன் வருகை தந்து இப்பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
TVK Pothukuzhu date announce