103 வயது முதியவர் 18 மாதங்கள் வரை சிறைவாசம்; மகன்களில் சூழ்ச்சியால் நொந்துப் போன தந்தை..!
103 year old man sentenced to 18 months in prison for plotting against his sons
ஐந்து ஏக்கர் நிலத்திற்காக தனது 103 வயது தந்தையை பொய் வழக்கில் சிறைக்கு அனுப்பிய கொடூர சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் நடந்துள்ளது. 103 வயதான குர்மீத் சிங், 2018-ஆம் ஆண்டில் தனது ஐந்து ஏக்கர் நிலத்தை குருத்வாராவிற்கு நன்கொடையாக வழங்க முடிவெடுத்தார்.
ஆனால், அவரது மகன்களான கமல்ஜீத் சிங் மற்றும் ஹர்பிரீத் சிங்கிற்குப் பிடிக்கவில்லை. இதனால் தந்தை குருத்வாராவிற்கு நிலத்தை கொடுப்பதைத் தடுக்க விரும்பியுள்ளனர். அந்நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கும் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், முதியவரின் மகன்கள் ஒரு தந்திரமான திட்டத்தை வகுத்து செயல்படுத்தியுள்ளனர்.

அதாவது, நீதிமன்றத்தில் நிலம் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் முடிந்துவிட்டதாகவும், இனி அங்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என்று அவர்கள் தனது தந்தை குர்மீத் சிங்கீதம் பொய் கூறியுள்ளனர். முதியவர் தனது மகன்கள் கூறியது உண்மை என நம்பி நீதிமன்றத்திற்குச் செல்லாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், வழக்கு தொடர்ப்பாங்க இரண்டு மகன்களும் தொடர்ந்து நீதிமன்றத்திற்குச் சென்று வந்துள்ளனர். எனவே விசாரணைகளுக்கு ஆஜராகத் தவறியதற்காக குர்மீத்துக்கு நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது. அத்துடன், சில நாட்களுக்குப் பிறகு போலீசார் சென்று 103 வயது முதியவரான அவரைக் கைது செய்துள்ளனர். அத்துடன், கைது செய்யப்பட்டஅவர் 18 மாதங்களாக சிறையிலும் இருந்துள்ளார்.

இந்நிலையில், சிறைக்குச் சென்ற உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர்கள் குர்மீத்தைப் பற்றி அறிந்து கொண்டுள்ளனர். அவரின் சிறைவாசத்திற்கு பின் இருக்கும் மகன்களின் சூழ்ச்சியை அறிந்து அவரை விடுதலை செய்யும் முயற்சிகளை தொடங்கியுள்ளனர். இருப்பினும், இரண்டு மகன்களும் அதனை முறியடிக்க முயன்ரத்தோடு, ஜாமீன் கிடைக்காமல் இருக்க அவர்கள் நிறைய முயற்சி செய்துள்ளனர்..
ஆனால், அந்த தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர்கள் பின்வாங்காமல், பல மாதங்களின்முயற்சிக்குப் பிறகு, குர்மீத்துக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இந்நிலையில், அவர் சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். தனது மகன்கள் செய்த காரியத்தால் அவர் மிகவும் மனமுடைந்து போயுள்ள அவர் எந்தத் தந்தைக்கும் தன்னைப் போன்ற ஒரு நிலைமை வரக்கூடாது என்று அவர் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
English Summary
103 year old man sentenced to 18 months in prison for plotting against his sons