வாலி படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் இவ்வளவு தானா.! ஆச்சரியத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


வாலி திரைப்படத்தில் நடிக்க அஜித் வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் தல அஜித். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் ஹச்.வினோத் இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது தல அஜித் மீண்டும் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். மேலும், இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் வீடியோ ஃபர்ஸ்ட் சிங்கிள் மற்றும் சண்டைக் காட்சி மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இந்த திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் நடிகர் அஜீத் நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் தான் வாலி. இந்த படத்தில் அஜீத் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வாலி படத்திற்காக அஜித் வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இவர் இந்த படத்தில் நடிக்க 10 லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ajith vali movie salary


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->