மீண்டும் வில்லனாகும்.. அஜித்.. இயக்குனர் இவரா.?! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இதனைத் தொடர்ந்து ஏகே 62 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தத் திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும்  இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க இருக்கின்றன .

இந்நிலையில் அஜித் குமார் பிரம்மாண்ட இயக்குனரான சங்கரின்  திரைப்படத்தில் வில்லனாக நடிக்கயிருப்பதாக கோடம்பாக்கத்தில்  செய்திகள் வெளியாகியிருக்கிறது. சங்கர் தற்போது ராம் சரணை வைத்து  ஆர்சி 15 என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். தமிழ் திரைப்படத்திற்கான ரிலீஸ் தேதி மற்றும் டைட்டில் வருகின்ற 27ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.

இந்தத் திரைப்படத்தில் ராம்சரனுக்கு வில்லனாக நடிக்க அஜித்துடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் ராம்சரனுடன், எஸ் ஜே சூர்யா, அஞ்சலி, பாலிவுட் நடிகை கியாரா அத்வானி  ஆகியோர் முன்னணி  கதாபாத்திரங்களில்  நடிக்கின்றனர்.

இந்தத் திரைப்படத்தில் தான் வில்லனாக நடிப்பதற்கு அஜித்குமாருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். அவர் சம்மதம் தெரிவித்து விட்டால் விரைவிலேயே அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அறிவிப்பை எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ajith will act as a villain for director shankar next film talks are going on


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->