முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைப்போம்.. அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை!
We will form the government with full majority Arvind Kejriwal is confident
டெல்லியில் முழு மெஜாரிட்டியுடன் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும் என்றும் வாக்காளர்களுக்கு பணம், தங்கச்சங்கிலி கொடுப்பதாக பா.ஜ.க. மீது அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
அடுத்த மாதம் 5-ம் தேதி டெல்லியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளநிலையில் ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. டெல்லி சட்டசபை தேர்தலுக்காக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-மந்திரியுமான கெஜ்ரிவால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார் இந்த நிலையில் வாக்காளர்களுக்கு பா.ஜ.க. பணம், தங்கச்சங்கிலி, சேலைகள் கொடுப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-பா.ஜ.க. தனது அனைத்து ஆயுதங்களையும் ஒப்படைத்து விட்டது என்றும் ஏனெனில் அவர்களுக்கு எந்த தொலைநோக்கும், முதல்-மந்திரி முகமும் இல்லை என கூறியுள்ளார் .மேலும் அதேநேரம் வாக்காளர்களுக்கு ஜாக்கெட்டுகள், சேலைகள், பணம், தங்கச்சங்கிலி கொடுத்து வருகிறார்கள் என்றும் . ஓட்டுக்காக பணமோ, பொருட்களோ கொடுக்கும் வேட்பாளர்கள், யாராக இருந்தாலும் அவர்கள் ஆம் ஆத்மியை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கு ஓட்டுப்போட வேண்டாம் என டெல்லி மக்களை கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் முழு மெஜாரிட்டியுடன் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
English Summary
We will form the government with full majority Arvind Kejriwal is confident