தனுஷ் மீதான குற்றச்சாட்டு : நடிகை நயன்தாராவுக்கு தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா பதிலடி!
Allegation against dhanush dhanush'father kasthuri raja responds to actress nayanthara
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாராவின் வாழ்க்கை குறித்த ஆவணப்படமான 'நயன்தாரா பியாண்ட் தி பேரி டேல்' என்ற படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் தனுஷ் தயாரிப்பில் நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் படத்தின் சிறு காட்சி இடம்பெற்றிருந்தது. இதனைக் கண்ட நடிகர் தனுஷ், அந்த வீடியோவிற்கு எதிராக படத்தின் தயாரிப்பாளர் என்ற அடிப்படையில் நடிகர் தனுஷ் ரூ. 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இது தொடர்பாக நயன்தாரா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தன் மீதுள்ள தனிப்பட்ட வெறுப்பால் நடிகர் தனுஷ் பழிவாங்குகிறார் என்று நடிகை நயன்தாரா பரபரப்பாக குற்றம் சாட்டி, இது குறித்த அறிக்கையினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.
இந்த நிலையில், நடிகை நயன்தாராவுக்கு தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, எங்களுக்கு வேலைதான் முக்கியம் என்றும், நம்மைத் துரத்துபவர்களுக்கோ, நம்மைப் பற்றிப் பேசுபவர்களுக்கோ பதில் சொல்ல நேரமில்லை என்று கூறிய அவர், என்னைப் போலவே என் மகனும் வேலையில் மட்டுமே கவனம் செலுத்துகிறார் என்று பதிலடி கொடுத்துள்ளார்.
English Summary
Allegation against dhanush dhanush'father kasthuri raja responds to actress nayanthara