"முடியவே... முடியாது.. ரசிகர்கள் தான் முக்கியம்.." பெரிய தலைக்கே நோ சொன்ன அல்லு அர்ஜுன்.!  - Seithipunal
Seithipunal


கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக அஜித், விஜய் உள்ளிட்ட பலரும் சமீபகாலமாக விளம்பட படங்களில் நடிப்பதை முழுவதுமாக துறந்து விட்டனர். தற்போது, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள் அல்லு அர்ஜுன் மற்றும் மகேஷ் பாபு உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் இதுபோன்ற விளம்பர படங்களில் நடிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். 

அந்த வகையில் நடிகர் அல்லு அர்ஜுன் போக்குவரத்து சம்பந்தமான ராபிடோ மற்றும் ரெட்பஸ் உள்ளிட்ட விளம்பரங்களில் நடித்து இருக்கின்றார். இத்தகைய நிலையில், பிரபல புகையிலை நிறுவனம் ஒன்று தங்களது நிறுவன தயாரிப்பில் நடிப்பதற்கு அல்லு அர்ஜுனை அணுகி இருக்கின்றனர். 

காதல் கடவுளாகும் அல்லு அர்ஜுன்.! முக்கிய படத்தின் ரீமேக் குறித்த அசத்தல்  தகவல்.! - Seithipunal

அவர்கள் இதற்காக கோடிகளில் சம்பளம் தர முன்வந்தனர். ஆனால், எந்தவித யோசனையும் இல்லாமல் புகையிலை விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என்று அல்லு அர்ஜுன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

"தனது ரசிகர்கள் புகையிலை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக இது இருக்கும். எனவே தவறான முன்னுதாரணமாக நான் இருக்க மாட்டேன்." என்று அல்லு அர்ஜுன் தெரிவித்துவிட்டாராம். இந்த விஷயம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

allu arjun skipped smoke ad


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->