அமீர்கானின் லால் சிங் சத்தா.. இந்து மதத்திற்கு எதிரானதா? உருவான சர்ச்சை.! - Seithipunal
Seithipunal


அமீர்கான் நடிப்பில் இன்று ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகியுள்ள திரைப்படம் தான் லால் சிங் சத்தா திரைப்படம். இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. 

இது குறித்த செய்தியாளர் சந்திப்பின்போது உதயநிதியிடம், 'இந்தி தெரியாது போடா' என்று டீசர்ட் அணிந்து எதிர்ப்பு தெரிவித்த நீங்கள் தற்போது இந்தி படத்தை தமிழகத்தில் அனுமதிக்கலாமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு உதயநிதி, "இந்தி தெரியாது போடா என்பது இந்தி திணிப்பிற்கு எதிரானதுதானே அன்றி, இந்தி மொழியை கற்றுக் கொள்ளக் கூடாது என்றோ, இந்தி படத்தை தமிழகத்தில் வெளியிட கூடாது என்றோ அர்த்தமாகாது. மொழியைத் தாண்டி எனக்கு அமீர் கானின் நடிப்பு மிகவும் பிடிக்கும். இது ஒரு ஃபேன்பாய் தருணம் என்று கூட சொல்லலாம்." என உதயநிதி தெரிவித்து இருந்தார்.

இந்த படம் இன்று வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இந்து கடவுள்கள் குறித்து மோசமான கருத்துக்களை பதிவு செய்துள்ளதாக கூறி உத்தரப்பிரதேசத்தில் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். 

அப்போது அவர்கள், "இந்த திரைப்படத்தை நாடு முழுவதும் தடை செய்யப் போவதாகவும், இனி அமீர்கானின் திரைப்படங்களை திரையில் ஓட விடமாட்டோம் என்றும், இந்து மக்கள் யாரும் அமீர்கானின் படத்தை பார்க்க வேண்டாம் என்றும் தெரிவித்து இருக்கின்றனர். இதன் காரணமாக தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amir Khan lal singh satha issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->