ராட்சத அலையில் சிக்கிய கப்பல் - 3 பேர் பலி; 13 பேர் மாயம்.! - Seithipunal
Seithipunal


எகிப்து நாட்டின் செங்கடல் பிராந்தியத்தில் உள்ள மர்சா ஆலம் நகரில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு உல்லாச படகு ஒன்று புறப்பட்டு சென்றது. 4 தளங்கள் கொண்ட அந்த படகில் 31 சுற்றுலா பயணிகள் மற்றும் 13 ஊழியர்கள் என்று மொத்தம் 44 பேர் பயணம் செய்தனர்.

இந்த படகு நேற்று அதிகாலையில் செங்கடலில் சென்றுகொண்டிருந்தபோது ராட்சத அலையில் சிக்கியதனால் தண்ணீரில் சாய்ந்து மூழ்கத் தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மூழ்கிக்கொண்டிருந்த படகில் இருந்த 28 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்து ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பின்னர் மீதமுள்ள 16 பேரை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அதில் 3 பேர் இன்று சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் 13 பேரை தேடும் பணி நடைபெறுகிறது.

ராணுவ மோதல்களால் ஏற்படும் ஆபத்துகள் காரணமாக செங்கடலில் படகுகளை இயக்குவதை பல்வேறு சுற்றுலா நிறுவனங்கள் நிறுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three peoples died and 13 peoples missing in boat drowned egypt


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->