தோற்றால் மட்டும் EVM காரணமா? காங்கிரஸுக்கு சுட சுட குட்டு! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் வாக்குச் சீட்டு முறைக்கு பதிலாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்தியது முதலே, தேர்தலில் தோல்வியடையும் கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு நடந்ததாக குற்றம் தாட்டுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

அந்த வகைகள் அண்மையில் மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு நடந்த சட்டமன்ற பொது தேர்தலில், ஜார்க்கண்டில் காங்கிரஸ் கூட்டணி கட்சியும், மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணியும் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.

ஜார்கண்ட் மாநில தேர்தல் குறித்து விமர்சனம் செய்யாத காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், மகாராஷ்டிரா மாநிலத் தேர்தலில் மட்டும் வாக்கு இந்திரத்தில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளது.

மேலும் இதனை ஒரு பிரச்சாரமாக கொண்டு போவதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் இன்று அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் பால் என்பவர், மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் சேதமடைய வாய்ப்பிருப்பதாகவும், இதனால் ஜனநாயகத்தின் உரிமை பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும் என்றும், எனவே மின்னணு வாக்குப்பதிவு முறைக்கு தடை விதித்து பழைய படி வாக்குச் சீட்டு முறையை கொண்டு வர உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரணை செய்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, சந்திரபாபு நாயுடுவோ, ஜெகன்மோகன் ரெட்டியோ தேர்தலில் வெற்றி பெற்றால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பற்றி பேசுவதில்லை, தோல்வியடைந்தால் மட்டும் பேசுகின்றனர் என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EVM case supreme court judgement


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->