வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன் குரல்.!  - Seithipunal
Seithipunal


இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான படம் 'வேட்டையன்'. இந்தப் படத்தில் பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகாசிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ள, இப்படத்தின் முதல் பாடலான 'மனசிலாயோ' பாடல், இரண்டாவது பாடலான 'ஹண்டர் வண்டார்' பாடல் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி வைரலாகி வருகின்றன. 

இதற்கிடையே இந்தப் படத்தில் 'சத்யதேவ்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள அமிதாப் பச்சனின் குரலுக்குப் பதிலாக பிரகாஷ் ராஜின் குரல் பயன்படுத்தப்பட்டிருந்த முன்னோட்ட வீடியோ வெளியாகியிருந்தது. இது ரசிகர்கள் மத்தியில் எதிர் மறையான விமர்சனத்தை பெற்றது. 

இதனைக்கருத்தில் கொண்டு படக்குழுவினர் அமிதாப் பச்சனின் குரலை ஏஐ தொழில் நுட்பத்தின் உதவியுடன் அனைத்து மொழிகளுக்கும் பயன்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படம் வருகிற அக்டோபர் மாதம் 10-ந் தேதி வெளியாக உள்ளதால், டிரெய்லர் வருகிற அக்டோபர் மாதம் 2-ந் தேதி வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

amitabh bachchan voice in vettaiyan movie


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->