ஸ்வீடனில் சோகம்..பள்ளிக்கூடத்தில் துப்பாக்கி சூடு..10 பேர் பலி.!
Tragedy in Sweden Shooting at school 10 People Killed!
ஸ்வீடனில் பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர்.துப்பாக்கி சூடு நடத்திய நபர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பாவில் அமைந்துள்ள ஸ்வீடன் நாடு. இந்நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரிபுரொ நகரில் மேல்நிலைப்பள்ளியில்தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், சம்பவத்தன்று இந்த பள்ளிக்கூடத்தில் இன்று துப்பாக்கி சூடு நடைபெற்றது. தொடர்ந்து நடந்த இந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர்சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். உடனடியாக தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து துப்பாக்கி சூடு நடத்திய நபர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.ஸ்வீடனில் பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Tragedy in Sweden Shooting at school 10 People Killed!