#Video : மனதை பறிக்கும்.. சிம்ரனின் விண்டேஜ் பாடல்.! குரலை விடுங்க.. குயிலை பாருங்க.! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக விளங்கியவர் நடிகை சிம்ரன். இவர் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில்  நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார். 1995 ஆம் ஆண்டு இந்தி சினிமாவில் அறிமுகமான இவர் 1997 ஆம் ஆண்டில் தளபதி விஜய் நடிப்பில் உருவான ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்தத் திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தளபதி விஜய்  அஞ்சு அரவிந்த் உள்ளிட்டோர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து விஐபி  நேருக்கு நேர், துள்ளாத மனமும் துள்ளும், வாலி, கண்ணெதிரே தோன்றினாள். பஞ்சதந்திரம், பம்மல் கே. சம்பந்தம் உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் நடித்தவர். இவர் நடித்த கோவில்பட்டி வீரலட்சுமி மற்றும் துள்ளாத மனமும் துள்ளும் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று பல விருதுகளை வென்றன என்பது குறிப்பிடத்தக்கது. 2000 ஆண்டிலேயே அதிக சம்பளம் வாங்கிய தமிழ் நடிகையாக சிம்ரன் தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்ரன் தனது நீண்ட கால நண்பரான தீபக் பாகா என்பவரை கடந்த 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு அதிப் ஓடோ மற்றும் அதித் வர்மா என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். சில காலம் சினிமாவிலிருந்து ஓய்வெடுத்த சிம்ரன்  தற்போது தொலைக்காட்சி தொடர்கள் வெப் சீரியல்கள் சினிமா என வரிசையாக தனது திரை பயணத்தை தொடங்கி இருக்கிறார்.

இந்நிலையில் சிம்ரன் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவ்வாறு பங்கேற்ற நிகழ்ச்சியின் வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. அந்தப் பேட்டியின் போது சிம்ரன் தான் நடித்த விஐபி என்ற திரைப்படத்திலிருந்து  சூப்பர் ஹிட் பாடல் ஆன மின்னல் ஒரு கோடி என்ற பாடலை பாடும் அந்த வீடியோவை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

an old video of simran singing a song goes viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->