விடாமல் துரத்தும் "கோச்சடையான்".!! லதா ரஜினிகாந்த் எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு.!! - Seithipunal
Seithipunal


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான கோச்சடையான்  திரைப்படத்தை மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த நிலையில் அந்த படம் சுமாரான வெற்றியை பெற்றது. இந்த நிலையில் கோச்சடையான் படத்திற்கு நிதி வழங்கிய நிறுவனம் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை அடுத்து 2014ஆம் ஆண்டு கர்நாடக நீதிமன்றம் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் குறித்தும், கோச்சடையான் படத்தின் நிதி விஷயங்கள் குறித்தும் தயாரிப்பு நிறுவனம் கருத்துக்கூற தடை விதித்தது.

இந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்றம் லதா ரஜினிக்கு எதிரான வழக்கை ரத்து செய்த நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கு தொடர அனுமதி வழங்கியது.  போலீசாரின் குற்றப்பத்திரிகையில் தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டுமென லதா ரஜினிகாந்த் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி லதா ரஜினிக்கு எதிராக ஏமாற்றுதல் மற்றும் தவறான தகவல் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுவதாகவும், கோச்சடையான் படத்திற்கு கடன் பெற்ற விவகாரம் தொடர்பாக உரிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கு விசாரணையில் இருந்து லதா ரஜினிகாந்துக்கு விலக்கு அளித்து கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் லதா ரஜினிகாந்த் எதிரான வழக்கில் ஏமாற்றுதல் மற்றும் தவறான தகவல் கொடுத்ததாக 2 பிரிவுகள் மீதான குற்றச்சாட்டை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தனியார் நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இந்த மேல்முறையீட்டு வழக்கானது தொடரப்பட்டுள்ளது. 

கோச்சடையான் படத்திற்காக லதா ரஜினிகாந்த் உத்திரவாதத்தின் பெயரில் முரளி என்பவருக்கு கடன் வழங்கிய ஆட் பியூரோ நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தால் பட்டியலிடப்பட்டு கூடிய விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Appeal in SupremeCourt against Latha Rajinikanth in Kochadaiyan movie case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->