ஒரே டேக்கில் வசனம் பேசிய அண்ணாமலை - வெளியானது அரபி படத்தின் ட்ரெய்லர்.! - Seithipunal
Seithipunal


தமிழக அரசியல் மற்றும் சினிமா உலகில் இருந்து நிறைய பேர் அரசியலுக்கு வந்தவர்களும் அரசியலில் இருந்து சினிமாவுக்கு சென்றவர்களும் உள்ளனர். அந்த வரிசையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் இணைந்துள்ளார். அதாவது இவர் ‘அரபி’ என்ற கன்னடப் படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் அண்ணாமலையின் நடிப்பு குறித்து இயக்குநர் ராஜ்குமார் பேசியுள்ளார். அதாவது, “சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உடல் குறைபாடு என்பது தடை கிடையாது. இரு கைகளை இழந்து நீச்சலில் சாதித்த விஸ்வாஸின் கதை எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது. அவர் என்னுடன் பயணித்த பின்பே நடிக்க ஒப்புக் கொண்டார். 

அவருக்கு ஊக்கம் கொடுக்கும் பயிற்சியாளராக அண்ணாமலை இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். நான் அண்ணாமலையை அணுகிய சமயத்தில்தான் அவர் வேலையை ராஜினாமா செய்திருந்தார். அவருக்கும் விஸ்வாஸை சந்தித்ததும் உடனே பிடித்துவிட்டது. ஆனால், ஒரு வருடம் கழித்து ஒரே ஒரு நாள் தான் அண்ணாமலையின் கால் ஷீட் கிடைத்தது. 

அண்ணாமலை அரசியலில் பிஸியானவர் என்பதால், ஒரே நாளில் ஒரு பாடல், 5 காட்சிகளை அவரை வைத்து எடுத்தோம். அண்ணாமலைக்கு பயங்கரமான நினைவாற்றல் உள்ளது. இரண்டு பக்க வசனத்தை ஒரே டேக்கில் பேசி முடித்தார்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

arabhi movie trailer released


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->