'நான் ஒரு நாள் முதல்வரனால் இதை தான் செய்வேன்' அர்ஜுன் பேட்டி.! - Seithipunal
Seithipunal


கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் அர்ஜுன். இவர் தமிழில் ஜெய்ஹிந்த் மற்றும் முதல்வன் உள்ளிட்ட ஹிட் படங்கள் கொடுத்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். குறிப்பாக அர்ஜுனின் முதல்வன் படத்தை தற்போது வரை யாருமே மறந்திருக்க மாட்டார்கள்.

அதன் பின் அர்ஜுன் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்கள் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஹைதராபாத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அர்ஜுன், "நான் போலீசாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன் எதிர்பாராத விதமாக நடிகனாகி விட்டேன்.

எனது மகள்கள் என்னுடைய பழைய படத்தை பார்த்துவிட்டு கிண்டல் செய்கிறார்கள். ஸ்ரீ ஆஞ்சநேயம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நான் ஆஞ்சநேயராக நடித்தேன். அந்த படத்திற்கு பின்னர் என்னை யார் பார்த்தாலும் கையெடுத்து கும்பிடுவார்கள். அதுபோல முதல்வன் படத்தை பார்த்த பின் நீங்கள் அரசியலில் ஈடுபடுங்கள் என்று பலரும் கோரிக்கை வைத்தார்கள். அந்த படத்தில் வருவது போல் ஒரு தலைவர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று மக்கள் ஆசை கொள்கின்றனர். 

முதலில் அந்த படத்தில் நடிக்க நான் யோசித்தேன். அதன் பின் அந்த படத்தில் நடித்து எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. இயக்குனராக வேண்டும் என்ற ஆசையும் எனக்கு இருக்கிறது. நடிகர்கள் குறித்து கிசுகிசுக்கள் வந்தால், அவர்களது குடும்பத்தில் பெரும் பிரச்சனையும், வேதனையும் ஏற்படும். எனக்கு ஒரு வேளை ஒரு நாள் முதல்வராக வாய்ப்பு கிடைத்தால் கல்வி மற்றும் மருத்துவத்தை மக்களுக்கு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்து விடுவேன்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arjun about One day Cm In press meet 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->