தளபதி விஜய் மற்றும் லோகேஷ்க்கு குட் நியூஸ் சொன்ன அர்ஜுன் தாஸ்.! உற்சாகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


கடந்த 2012ஆம் ஆண்டில் பெருமான் என்ற திரைப்படத்தின் மூலம் அர்ஜுன் தாஸ் திரையில் அறிமுகமானார். அதன் பின்னர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான கைதி படத்தில் முக்கிய நடிகராக அறியப்பட்டார். ஆனால், மாஸ்டர் படத்தில் அர்ஜுன் தாஸ்க்கு மிகப்பெரிய வெயிட்டான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. 

கடந்த 2017இல் மலையாளத்தில் வெளியான அங்கமலி டைரிஸ் என்ற திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. இது பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. தமிழில் கேடி என்கிற கருப்பு துரை படத்தை இயக்கிய இயக்குனர் மதுமிதா சுந்தரராமன் இந்த படத்தை இயக்க உள்ளார். 

இதில் ஹீரோவாக அர்ஜுன் தாஸ் நடிக்க இருக்கிறார். இதனை தொடர்ந்து, நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவருக்கும் அர்ஜுன் தாஸ் தனது நன்றியை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து சமூக வலைதளப் பக்கத்தில், "மாஸ்டர் திரைப் படத்தில் நான் நடிக்கவில்லை என்றால் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்து இருக்குமா என்பது தெரியவில்லை. பிராஜக்ட்-ல் கையெழுத்து போட்டவுடன் என்னுடைய நண்பர்கள் மற்றும் நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவருக்கும் தான் தகவல் கூறினேன்." என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

arjun doss thanks to vijay and lokesh kanagaraj


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->