"மோகன் லாலுடன் இணையும் ஆக்ஷன் கிங்.?! நீண்ட நாள் கனவு  நிறைவேறுமா.?! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமா ரசிகர்களால் ஆக்சன் கிங் என அழைக்கப்படும் நடிகர் அர்ஜுன் ஆக்சன் படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை  தக்க வைத்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் கதாநாயகனாக நடித்து வந்த இவர் தற்போது வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்கள் என  வித்யாசமான கதாபாத்திரங்களில் தோன்றி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

மங்காத்தா படத்தில் இவர் நடித்த காவல்துறை அதிகாரியாகவும், இரும்புத்திரை படத்தில் வில்லனாகவும் மிரட்டி இருப்பார் அர்ஜுன். ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் இருந்திருக்கிறார் அவர். ஜெய்ஹிந்த் மற்றும் சுயம்வரம் ஆகிய திரைப்படங்கள் இவரது இயக்கத்தில் உருவானவை.

சமீபத்திய பேட்டி ஒன்றில் இவர்  மலையாள நடிகர் மோகன்லால் வைத்து  திரைப்படத்தை இயக்குவது தனது கனவு என தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக  மோகன்லால் சந்தித்து  பேசியதாகவும் கூறியிருக்கிறார் அர்ஜுன். அவரை சந்தித்து கதை சொல்லி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவரை வைத்து படம் இயக்க வேண்டியது தனது நீண்ட நாள் விருப்பம் எனவும் தெரிவித்துள்ளார் அர்ஜுன்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அர்ஜுன். இந்த படத்திற்கான முதல் ஷெட்யூல் ஷூட்டிங் முடிந்த நிலையில் இரண்டாவது ஷெட்யூல் ஷூட்டிங்கில் பங்கேற்க இருப்பதாக அவர் தனது பேட்டியில் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

arjun wants to direct this malayalam super super star


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->