உதவி இயக்குநராக சேர விருப்பமா? இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவின் நிபந்தனைகள்!
Ashwath Marimuthu Assistant Director Wanted
'ஓ மை கடவுளே', 'டிராகன்' படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் இடம் பிடித்த இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து, தற்போது தனது அடுத்த படத்திற்காக உதவி இயக்குநர்களை தேடி வருகிறார்.
அவர் அஜிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து இயக்கவுள்ள சிம்புவின் 51-வது படம், ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல். இதற்காக, தன்னுடன் உதவி இயக்குநராக சேர விரும்புவோருக்கு சில நிபந்தனைகள் விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதன்படி, சிபாரிசு தேவையில்லை – திறமையே முக்கியம்! மூன்று தேர்வுச் சுற்றுகள்:
முதல் சுற்று – சுயவிவரத்தின் அடிப்படையில்
இரண்டாம் சுற்று – குறிப்பிட்ட சூழலுக்கேற்ப காட்சி எழுதுதல்
மூன்றாம் சுற்று – நேரடி நேர்காணல் (விடியோ காலிங் இல்லை!)
* குறும்பட அனுபவம் / இலக்கிய வாசிப்பு இருக்குமா? இன்னும் கூடுதல் மதிப்பு!
* டெக்னிக்கல் திறமை அவசியம்
* நேர்மை முக்கியம் – மோசமான காட்சியையும் ‘சூப்பர், சார்பாஸ்’ என்று சொல்ல வேண்டாம்!
* சினிமா மட்டும் அல்ல, தினமும் செய்தித்தாள் வாசிக்க வேண்டும்
* குறைந்தது ஓராண்டு முழுவதுமாக பணியாற்ற வேண்டும்
* மொத்தம் 8 பேர்தான் தேர்வு செய்யப்படுவார்கள்
* கண்டிப்பாக பார்ட்டி ஷூ தேவை – ஏனென்றால், அடிக்கடி ஜாலியாக இருப்போம்!
English Summary
Ashwath Marimuthu Assistant Director Wanted