நடிகர் மனோஜ்குமார் மறைவு - பிரதமர் மோடி இரங்கல்.!!
prime minister condoles to actor manojkumar
பழம்பெரும் நடிகர் மனோஜ் குமார் உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இ ன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். மனோஜ் குமாரின் மறைவிற்கு அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் மனோஜ் குமாரின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதவிட்டிருப்தாவது:- "புகழ்பெற்ற நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான மனோஜ் குமார் அவர்களின் மறைவால் ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளேன்.

இந்திய சினிமாவின் அடையாளமாக அவர் இருந்தார், குறிப்பாக அவரது தேசபக்தி ஆர்வத்திற்காக நினைவுகூரப்பட்டார். அது அவரது படங்களிலும் பிரதிபலித்தது.
மனோஜ் குமாரின் படைப்புகள் தேசிய பெருமையின் உணர்வைத் தூண்டின. அது மேலும் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும். இந்த துயர நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன" என்றுத் தெரிவித்தார்.
English Summary
prime minister condoles to actor manojkumar