வெம்பக்கோட்டை அகழாய்வு - செம்பு "அஞ்சன கோல்" கண்டெடுப்பு..!
anjana kol found in vembakottai excavation
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை அருகே விஜய கரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரைக்கும் இந்த அகழாய்வு பணியில், சுடுமண் முத்திரை, கண்ணாடி மணிகள், மண் குடுவை, மண்பாண்ட பாத்திரங்கள் உள்பட 3,200-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன.
இந்த நிலையில், வெம்பக்கோட்டை அகழாய்வில் கூடுதலாக செம்பினால் செய்யப்பட்ட'அஞ்சன கோல்' கிடைத்துள்ளது. சுமார் 13 செ.மீ. ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த அஞ்சன கோல், 29.5 மி.மீ. நீளமும், 6.6 மி.மீ சுற்றளவும், 2.64 மி.கி. எடையும் கொண்டதாக உள்ளது.
இந்த அகழாய்வு பணியில் தொடர்ந்து பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருவதாக அகழாய்வு இயக்குநர் தெரிவித்தார். நேற்றைய தினம் தங்கத்தினால் ஆன பொருள் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
anjana kol found in vembakottai excavation