ஓடிடியில் அசத்த வரும் அவதார் 2 - எப்போது தெரியுமா?  - Seithipunal
Seithipunal


ஓடிடியில் அசத்த வரும் அவதார் 2 - எப்போது தெரியுமா? 

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரைப்படம் ’அவதார்’. இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இந்தப் படத்தின் அடுத்த பாகமான ’அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் கடந்தாண்டு வெளியானது. 

இதுவும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் புதிய சாதனைகளையும் படைத்தது. திரையரங்களில் ஒரு சுற்று ஓட்டமெடுத்த ’அவதார் 2’ திரைப்படம், தற்போது அதன் ஓடிடி பிரவேசத்தை அறிவித்துள்ளது.

அதன் படி ’டிஸ்னி+’ மற்றும் ’ஹெச்பிஓ மேக்ஸ்’ உள்ளிட்ட ஓடிடி தளங்களில் அவதார் 2 திரைப்படத்தை அடுத்த மாதம் 7 தேதி முதல் காணலாம். ரசிகர்கள் விரும்பும் வகையில் திரையனுபவத்தை வழங்க அவதார் 2 ஓடிடி பிரதியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்திய ரசிகர்கள் அவதார் 2 திரைப்படத்தை ’டிஸ்னி+ஹாட்ஸ்டார்’ தளத்தில் ரசிக்கலாம். வெளிநாடுகளில் உள்ள ரசிகர்களுக்கு அவர்கள் வசிக்கும் நாடுகளைப் பொறுத்து, கட்டண அடிப்படையில் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் அவதார் 2 திரைப்படத்தை கண்டுகளிக்கலாம்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

avatar the way of water ott release in june 7


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->