திருமணம் நடைபெற இருந்த நிலையில் இளம்பெண் தற்கொலை..அதிர்ச்சி தகவல்!
Teenage girl commits suicide Shocking news
விரைவில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் இளம்பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆன்லைன் மோசடியில் ரூ. 1.50 லட்சத்தை இழந்த நிலையில் இந்த விபரீத முடிவை அவர் எடுத்துள்ளார்.
நாடு முழுவதும் ஆன்லைன் மோசடி அதிகரித்துவருகிறது.இந்த ஆன்லைன் மோசடியில் பலர் பணத்தை இழப்பதுடன் தங்கள் உயிரையும் மாய்த்துகொள்ளுகின்றனர்.அந்த வரிசையில் உத்தரபிரதேச மாநிலம் சஹரன்பூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ராணி உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். வயது 26 வயதான அந்த பொண்ணுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், ராணிக்கு கடந்த சில நாட்களுக்குமுன் ஆன்லைன் லாட்டரியில் 42 லட்ச ரூபாய் பரிசு கிடைத்துள்ளது என்றும் . இந்த பரிசு தொகையை பெறவேண்டுமானால் வரி தொகையாக 1.50 லட்ச ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டுமென ஆன்லைன் மூலம் மெசேஜ் வந்துள்ளது.
இதனால் மகிழ்ச்சி வெள்ளத்தில் திகைத்துப்போன ராணி அந்த மெசேஜை நம்பி தனது வங்கி கணக்கில் சேமித்து வைத்திருந்த பணம், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கடன் வாங்கி ரூ. 1.50 லட்சம் பணத்தை மெசேஜ் வந்த லிங்கில் செலுத்தியுள்ளார்.
இதையடுத்து லாட்டரி தொகையான ரூ. 42 லட்சம் வந்துவிடும் என அவர் நம்பி காத்துக்கொண்டிருந்தார். கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது.பின்னர், ஓரிரு நாட்கள் கழித்து தனது வங்கி கணக்கை பார்த்துள்ளார். அதில், லாட்டரி தொகையான 42 லட்ச ரூபாய் வரவு வைக்கப்படவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த ராணி தான் ஆன்லைன் மோசடியில் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து மிகுந்த மன உளைச்சலில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் தற்கொலை செய்துகொண்ட ராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Teenage girl commits suicide Shocking news