பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது சோகம் ..2வது மாடியில் இருந்து தவறி விழுந்து மாணவர் பலி! - Seithipunal
Seithipunal


 பெங்களூருவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது 2வது மாடியில் இருந்து தவறி விழுந்து ஐஐஎம் மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவி ஐஐஎம் இந்திய நிர்வாக மேலாண்மை கல்லூரியில்  குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த நிலேய் கைலாஷ்பாய் என்ற மாணவன் எம்பிஏ 2ம் ஆண்டு படித்து வந்தார்.இந்நிலையில், கடந்த 4ம் தேதி கைலாஷ்பாய்க்கு 29வது பிறந்தநாள். இதையொட்டி பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்த கைலாஷ் தனதுகல்லூரி விடுதியில் சகமாணவர்களுடன் சேர்ந்து  பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.

இதன் பின்னர், தனது அறைக்கு திரும்பியபோது 2வது மாடியில் இருந்து கைலாஷ்பாய் தவறிவிழுந்தாக கூறப்படுகிறது . அப்போது கைலாஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 கைலாஷ் உயிரிழந்தது அடுத்தநாள் காலை மாணவர்களுக்கு தெரியவந்ததையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் கைலாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sadness during a birthday celebration Student falls to death from second floor


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->