ஹீரோ யாரு கமலா? பகத் பாசிலா? ரசிகர்களை குழப்பிய லோகேஷ் கனகராஜ்.! விக்ரம் விமர்சனம்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விக்ரம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. பல்வேறு திரையரங்குகளில் நள்ளிரவு முதலே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில், இன்று வெளியான விக்ரம் படம் அட்டகாசமான விமர்சனங்களை பெற்று வருகிறது. நெகட்டிவ் விமர்சனங்களே இல்லாதவகையில் படம் வெற்றி பெற்றுள்ளது. போதைப்பொருட்கள் கடத்தும் மாஃபியா கும்பல்களின் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தின் முதல் பாதியில் முழுவதும் பகத் பாசிலை மையமாகக்கொண்டு கதை இயங்குகிறது.

அடுத்த கட்ட பட கதையும் கூட பகத் பாசிலின் கதாபாத்திரத்திற்கு சிறிதும் தொய்வில்லாமல் ஸ்கோப் கொடுக்கின்றது. இந்தப் படத்தில், ஆக்ஷன் காட்சிகளில் பஹத் பாசில் மிரட்டியிருக்கிறார்.

படத்தில் ஹீரோ கமல்ஹாசனா அல்லது பகத் பாசிலா என்று பார்ப்பவர்கள் நினைக்கும் அளவிற்கு படத்தின் கதை இருக்கின்றது. சமீபகாலமாக தமிழில் எந்த படமும் சரியாக இல்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில், அவர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை எடுத்துள்ளார் என்று கூறினால் அது மிகையாகாது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bahat basil scope in vikram movie 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->