ஈரோடு கிழக்கு: திமுகவா? காங்கிரஸா? யாருக்கு? செல்வப் பெருந்தகை பேட்டி!
Erode East By Election 2025 DMK Congress
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உயிரிழந்த நிலையில், அந்த தொகுதியில் தற்போது காலியானதாக அறிவிக்கப்பட உள்ளது.
இந்த தொகுதியை பொருத்தவரை திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே நடந்த இடைத்தேர்தலில் தனது மகன் இறப்பால் ஈவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்த நிலையில், அவரும் தற்போது உயிரிழந்ததால் இந்த தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
சட்டமன்ற பொது தேர்தலுக்கு இன்னும் சரியாக 15 மாதங்களே உள்ள நிலையில், இந்த இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு பதிலாக திமுகவே களம் இறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயத்தில் காங்கிரஸ் கட்சி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியை விட்டுக் கொடுக்க வாய்ப்பே இல்லை என்றும், மீண்டும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியே களமிறங்கும் என்று சொல்லப்படுகிறது.
இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை இடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த அவர், "இன்னும் எங்களுடைய துக்கமே முடியவில்லை. ஏழு நாள் துக்கம் அனுசரித்து இருக்கிறோம். இந்த ஏழு நாள் தூக்கம் முடிந்த பிறகு, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவருடன் கலந்து பேசுவோம். முதலமைச்சரோடு கலந்து பேசி முடிவெடுப்போம்" என்று தெரிவித்தார்.
English Summary
Erode East By Election 2025 DMK Congress