பிரபல தமிழ் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் காலமானார்.!! - Seithipunal
Seithipunal


பிரபல பாலிவுட் இசையமைப்பாளர், பாடகர் பப்பி லஹரி உடல்நலக்குறைவால் மும்பையில் இன்று காலமானார். 

பிரபல இந்தி இசையமைப்பாளரும், பாடகருமான பப்பி லஹரி இந்தி திரை உலகில் டிஸ்கோ இசையை பிரபலப்படுத்தியவர் இவர் ஏராளமான இந்தி படங்களுக்கு இசையமைத்து, பாடல்களும் பாடி உள்ளார். 

தமிழில் கார்த்திக் நடித்த அபூர்வ சகோதரிகள் ஆனந்த் பாபு நடித்த பாடும் வானம்பாடி, சுரேஷ் நடித்த கிழக்கு ஆப்பிரிக்காவில் ஷீலா ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். கருப்பம்பட்டி படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார். மேலும் தெலுங்கு படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இவர் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். 

இந்நிலையில், பப்பி லஹரி உடல்நலக்குறைவால் இன்று மும்பையில் காலமானார். தற்போது  அவருக்கு வயது 69 ஆகிறது. பப்பி லஹரி மறைவிற்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bappi lahiri passed away


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->