அடடா.. காதல் சர்ச்சையை கன்பார்ம் செய்த அமீர்- பாவனி.! பாவனியே வெளியிட்ட பதிவு.!
bavani close to ameer
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சி தான் "பிக்பாஸ்". இந்த நிகழ்ச்சிக்கு முதல் எபிசோடில் இருந்தே நிறைய ரசிகர்கள் கூட்டம் இருந்தது. இதனால் தான் தற்போது இந்த நிகழ்ச்சி 5வது சீசன் வரை வந்துள்ளது.
சமீபத்தில் தான் இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டு பிக்பாஸ் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமடைந்தவர் தான் நடிகை பாவனி ரெட்டி.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன் பவானி ரெட்டி சில சீரியல்களிலும் நடித்து இருக்கின்றார். இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பொழுது அமீருடன் காதல் சர்ச்சை கிசுகிசுக்கப்பட்டது.
இந்த நிலையில், இவர்கள் இருவரும் நண்பர்கள் என்று அவர்களே தெரிவித்து வந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இருவரும் சந்தித்துள்ளனர். இந்த புகைப்படத்தை பாவனியே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டு இருக்கின்றார்.