பிக்பாஸ் புகழ் கவினுக்கு திருமணம்.?! தேதி பற்றி வெளியான தகவல்.!  - Seithipunal
Seithipunal


தனியார் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமடைந்த கவின், "நட்புன்னா என்னன்னு தெரியுமா?" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இந்த திரைப்படமானது சரிவர வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் கூட அடுத்ததாக வெளியான லிப்ட் திரைப்படம் கவினுக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.

இந்த ஆண்டில் அவர் நடித்த டாடா திரைப்படம் பலதரப்பு மக்கள் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று, நல்ல வசூல் மழை பொழிந்தது. தற்போது, கவின் இரண்டு திரைப்படங்களில் படு பிஸியாக நடித்து வருகின்றார். 

இவர் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அதில் சக போட்டியாளரான லாஸ்லியாவை காதலித்தார். அதன் பின் இவர்கள் இருவரது உறவிலும் விரிசல்கள் பல ஏற்பட்டதாக கூறப்பட்டது. தொடர்ந்து, அவர்கள் இருவரது காதலும் பிரிந்து விட்டதாக கூறப்பட்டது. 

இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி கவினுக்கு திருமணம் நடக்க இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவிலேயே மணப்பெண் யார் என்பதும், திருமண தேதி பற்றிய தகவல்களும் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BB 3 Kavin may marry on aug 20


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->