அப்ப லியோ படமும் ஃப்ளாப்பா.? விஜய் படத்துக்கு இப்படி பேரு வெச்சா விளாங்காதாம்.! தோல்வி பட்டியல்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்  தளபதி விஜய். அடுத்த சூப்பர் ஸ்டார் இன் அரியணைக்கி தயாராக இருப்பவர். தற்போது லோகேஷ் கனகராஜன் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இவர் நடித்த படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்தாலும் சில படங்கள் வரிசையாக மிகப்பெரிய தோல்விகளையும் சந்தித்து இருக்கின்றன. குறிப்பாக விலங்குகள் மற்றும் பறவைகளின் பெயர்களைக் கொண்டு இவர் நடித்த திரைப்படங்கள் வரிசையாக தோல்வியை தழுவியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

குருவி ;
தில், கில்லி போன்ற வெற்றி படங்களை கொடுத்தார் தரணியின் இயக்கத்தில் விஜய் நடித்த படம் குருவி. உதயநிதி ஸ்டாலின் தயாரித்த முதல் திரைப்படமும் இதுதான். இத்திரைப்படத்தின் பாடல்கள்  மிகப்பெரிய ஹிட் என்றாலும் படம் மட்டர் ஃபிளாப்.

சுறா :
2019ம் ஆண்டு வெளியான சுறா திரைப்படம் விஜயின் 50 வது படமாகும். இதனால் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியானது. ஆனால் இந்த திரைப்படம் விஜய்க்கு மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. குறிப்பாக இந்தப் படத்தின் இண்ட்ரொடக்ஷன் காட்சி ரசிகர்களின் கிண்டலுக்கு உள்ளானது.

 புலி :
சிம்பு தேவன் இயக்கிய இந்த திரைப்படம் ஃபேண்டஸி கதைகளத்தோடு  தயாரானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் களமிறங்கிய இந்த திரைப்படமும் பெரிய தோல்வியை தழுவியது. விஜய்க்கும் இந்த களம் புதியது என்றாலும்  படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. 

பீஸ்ட் :
நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் வெளியான இந்த திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. திரைப்படத்தின் பாடல்கள் நன்றாக அமைந்திருந்தாலும் கதையானது பழைய விஜயகாந்த் படம் போல் இருந்ததாக ரசிகர்கள் கிண்டல் செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bigest flop vijay movies come up with the name of animal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->